Photo Galery (2020)
Commerce Association - GST Awareness Programme
29.01.2020 அன்று வணிகவியல் மன்றத்தின் சார்பாக வணிகவியல் பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு சரக்கு மற்றும் சேவைகள் வரி (GST) குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் தே. லெட்சுமி அவர்கள் தலைமையேற்று விழாவினை சிறப்பித்தார்கள். வணிகவியல் துறை தலைவர் முனைவர் மு. திருநாராயணசாமி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள். இக்கூட்டத்தில் மதுரை மண்டல சிறப்பு ஆலோசகர் ஓய்வு பெற்ற உதவி ஆணையர் திரு. M.S விஜயகுமார் அவர்கள் கலந்துகொண்டு சரக்கு மற்றும் சேவைகள் வரி குறித்து சிறப்பாக மாணவ-மாணவிகளுக்கு எளிதில் புரியும்படி மாணவர்களின் சந்தேகங்களுக்கு எளிமையாக விளக்கமளித்தார்கள். இக்கூட்டத்தில் வணிகவியல் பயிலும் சுமார் 150 மாணவ-மாணவிகள் பங்குபெற்று பயன்பெற்றனர். நிகழ்ச்சியின் முடிவில் வணிகவியல் துறையின் கௌரவ விரிவுரையாளர் முனைவர். ம. ராஜசேகர் அவர்கள் நன்றி கூறினார்கள்.






Competitive Exam - Training Programme - 2020
13.02.2020 அன்று வணிகவியல் துறையில் அரசுத் துறை சார்ந்த போட்டித்தேர்வுகளுக்கு தயாராவது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கல்லூரி முதல்வர் தே. லெட்சுமி அவர்கள் தலைமை தாங்கினார்கள். வணிகவியல் துறை தலைவர் முனைவர். மு. திருநாராயணசாமி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள். அதில் சென்னை ரேஸ் பயிற்சி நிறுவனம் (RACE COACHING CENTRE) சிதம்பரம் கிளையிலிருந்து கலந்து கொண்டு மாணவ-மாணவிகள் (TNPSC, BANK, POSTAL,RAILWAY) மற்றும் இதர போட்டித்தேர்வுகளை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி விரிவாக எடுத்துரைத்தார்கள். போட்டித்தேர்வுகள் குறித்து மாணவ-மாணவிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கு, மிக எளிதாக விளக்கமளித்தார்கள். இக்கூட்டத்தில் வணிகவியல் துறையில் பயிலும் 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். நிகழ்ச்சியின் முடிவில் வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் வே. மகேஸ்வரி அவர்கள் நன்றி கூறினார்கள்.







Commerce Department - National Conference
பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் 26.02.2020 புதன்கிழமை அன்று நடைபெற்ற ஒரு நாள் தேசிய கருத்தரங்கத்தில் 98 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. வியாபாரத்தை மின்னணு மாக்குவதால் ஏற்படும் வாய்ப்புகளும் விளைவுகளும் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வர் முனைவர் லட்சுமி தலைமை வகித்தார். வணிகவியல் துறை தலைவரும் கருத்தரங்க செயலாளருமான முனைவர் மு. திருநாராயணசாமி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். சிறப்பு விருந்தினர்களாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கலைப்புல முதல்வர் திரு.செல்வராஜன் மற்றும் வணிகவியல் துறைத்தலைவர் முனைவர். திரு இளங்கோவன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். மேலும் அண்ணாமலை பல்கலைக்கழக வணிகவியல் துறை பேராசிரியர்கள் சுந்தர் மற்றும் பா சீனிவாசன் ஆகியோர் கருத்து அமர்வுக்கு தலைமை வகித்தனர். மதுரை மண்டல மாநில வரி உதவி ஆணையர் (ஓய்வு) திரு. விஜயகுமார் அவர்கள் நிறைவுரையாற்றினார். கருத்தரங்கில் 98 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. நாலு பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உறுப்புக் கல்லூரிகளில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். முடிவில் வணிகவியல்துறை உதவிப் பேராசிரியர்கள் முனைவர் ம. ராஜசேகர் மற்றும் முனைவர். வ. தம்பிஞானதயாளன் ஆகியோர் கருத்தரங்கை ஒருங்கிணைத்து வழங்கினார்கள்.